இலங்கை உட்பட 55 நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட மாஸ் சொக்லெட்டுகளை மீளப்பெறுவதற்கு மார்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அண்மைக்காலமாக மார்ஸ் சொக்லெட் தொடர்பில் நுகர்வோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரபல சொக்கலேட் தயாரிப்பு நிறுவனமான மார்ஸ் தனது இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு விற்பனை செய்த, மில்லியன் கணக்கான மாஸ் மற்றும் ஸ்னிகர்ஸ் (Mars and Snickers) தொடர்பில் மீள் பரிசோதனை செய்யவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனது.
மார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புக்களில் ஒன்றான ஸ்னிகர் சொக்கலேட்டில் சிவப்பு நிற பிளாஸ்டிக் துண்டு ஒன்று காணப்பட்டதாக ஜேர்மன் நாட்டில் உள்ள நபர் ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்தே உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட மார்ஸ் சொக்லெட்டுக்களை மீளப்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக, நெர்லாந்தின் மார்ஸ் கூட்டுறவு விவகார இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தயாரிப்பு வரிசையில் உருவாக்கப்பட்ட ஏனைய சொக்கலேட்களிலும் இவ்வாறான பிளாஸ்டிக் துண்டுகள் இருக்குமா என்பது தொடர்பில் உறுதியாக கூறமுடியாதுள்ளது எனவும், அவர் குறிப்பிட்டார்.