சர்ச்சைகளுக்கு மத்தியில் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்ட அதிரடி அறிவித்தல்!

அரசியலமைப்பிறகு மாறாக நாடாளுமன்றம் கலக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையாளருக்கு மஹிந்த தேசப்பிரிய மாற்றியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “ஜனாதிபதியால் கடந்த 2019.11.09 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் விடுத்திருந்தார்.

அதன் படி அரசியலமைப்பிற்கும் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திற்கும் அமைவாக தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஆற்றப்பட வேண்டிய ஆரம்ப நியதி சட்ட பணிகளுடன் தொடர்புபட்ட நிர்வாக நடவடிக்கையை ஆற்றும் அதிகாரம் மறு அறிவித்தல் வரும் வரை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஏ.பி,சி. பெரேரா அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

அத்துடன் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அவரது மேலதிக கடமைகளை ஆற்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளருக்கு இந்த நிர்வாக நடவடிக்கையை கையளிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தீர்மானித்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts