சர்க்கரை நோயை நோய் இல்லை என்று பொறுப்பற்றத்தனமாக பேசுகிறார் கோபிநாத்.. டாக்டர்கள் வருத்தம்!

சரக்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றையெல்லாம் நோயே இல்லை என்கிறார் நீயா நானா கோபிநாத்.

எவ்வளவு பொறுப்பற்ற தனம் இது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். நீயா நானா கோபிநாத் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது இப்போது தொடர்கதையாகி வருகிறது. அவரது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பேசுவதும் சரி, இவர் அதற்கு கருத்துக்கள் சொல்வதும் சரி, வர வர சர்ச்சைகளின் பிறப்பிடமாக மாறி வருகிறது. இந்த நிலையில் மருத்துவர்கள் குறித்த இவரது நிகழ்ச்சி விவாதம் பெரும் சர்ச்சைகளையும், டாக்டர்கள் மத்தியில் கடும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Vijay-tv-gobinath

தமிழகம் முழுக்க நேற்று டாக்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். கோபிநாத்தின் பேச்சுக்கும, அவரது நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மருத்துவர்களையும் குற்றம் சாட்டியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கோபிநாத்தையும், அவரது நிகழ்ச்சியையும் விமர்சித்தும், கோபிநாத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

கோபிநாத்தின் நிகழ்ச்சியானது மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் உள்ளது. மக்களின் அறியாமையை அவரது நிகழ்ச்சியின் விறுவிறுப்புக்கு அவர் பயன்படுத்திக் கொள்கிறார் என்று டாக்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோபிநாத்தின் நிகழ்ச்சி குறித்து மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் சுரேஷ் கூறுகையில், கோபிநாத் நடத்திய அந்த நிகழ்ச்சி மருத்துவத்துக்கு எதிரானது மட்டுமல்ல, மக்களின் உயிருக்கே எதிரானது. மருத்துவர்களை இழிவுபடுத்துவதாக எண்ணி மருத்துவத்தில் உள்ள அவரது அறியாமையை வெளிப்படுத்தி உள்ளார்.

இதனால் நிகழ்ச்சியை பார்க்கும் பொதுமக்கள் தவறான கருத்து காரணமாக சிகிச்சை எடுத்து கொள்ளாமல் உயிருக்கே ஆபத்து உருவாகும் நிலை உண்டு.

ரத்தகொதிப்பும், சர்க்கரை நோயும் நோயே அல்ல என்கிறார். இது மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க உருவாக்கிய நோய் என்கிறார். எவ்வளவு பெரிய பொறுப்பற்றதனம்.

கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா ஸ்கேன் எடுத்ததால் குழந்தைக்கு முடி வளரவில்லை என ஒரு பெண் கூறுவதை சரி என கோபிநாத் சொல்கிறார்.

அல்ட்ரா ஸ்கேனில் கதிர் வீச்சு கிடையாது. அது காந்த அலைகள் மூலம் இயங்குவது. அல்ட்ரா ஸ்கேன் தான் குழந்தையின் வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் மருத்துவர்கள் கண்காணிக்க உதவுவது என்றார் அவர்.

இதற்கிடையே மக்களிடையே மருத்துவர்கள் குறித்தும், மருத்துவத் துறை குறித்தும் தவறான கருத்து ஏற்படும்படியாக பேசிய கோபிநாத் மீதும் அவரது நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க்க கோரியும் தமிழக முதல்வரின் குறை தீர்ப்புப் பிரிவில் டாக்டர்கள் பலர் புகார் கொடுத்துள்ளனர். இதேபோல சென்னை போலீஸ் கமிஷனரிடமும் புகார் தரப்பட்டுள்ளது.

Related Posts