சரியான நேரத்தில் தீர்மானம் எடுப்பேன்: வடக்கு முதல்வர்

வடக்கு மாகாணத்தின் இரு புதிய அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் சரியான நேரத்தில் முடிவெடுப்பேன் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களின் பதவி வெற்றிடமாக உள்ள நிலையில், கல்வி அமைச்சர் ஒருவரை முதல்வர் தெரிவுசெய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது தொடர்பில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, போரின் பின்னரான காலகட்டத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும், உரிய செயன்முறைகளுக்கும் அமைவாக உரிய நேரத்தில் குறிப்பிட்ட நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர், அதுவரை குறித்த அமைச்சுக்களை தானே நிர்வகிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts