சரமாரியான வெள்ளை பாஸ்பரஸ் குண்டு தாக்குதலால் மிரண்டு போயுள்ள ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீது ரஷ்யா வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போர் தாக்குதல் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யா இடையிலான பதற்றம் தற்போது அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பக்முட் நகரில் இருந்து அரை மணி நேரம் தொலைவில் இடைவிடாமல் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் அங்குள்ள சாசிவ் யார் நகரம் மீது ரஷ்யா தொடர்ந்து குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், செவ்வாயன்று சாசிவ் யாரின் தெற்கு விளிம்பில் உள்ள ஒரு சாலையில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் ரஷ்ய நிலைகளில் இருந்து சுடப்பட்டன என்று தகவல் வெளியாகியுள்ளது.

அவை மெதுவாக தரையில் விழுந்துள்ளன, மேலும் பாஸ்பரஸ் பந்துகள் ஒரு கால்பந்து மைதானத்தின் அளவிற்கு சமமான மேற்பரப்பில் சாலையின் இருபுறமும் உள்ள தாவரங்களுக்கு தீ வைததது என்று தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், அடர்த்தியான வெள்ளை புகையுடன் சேர்ந்து 1,300 டிகிரி செல்சியஸ் வரையிலான தீ கனல்களை உருவாக்குகின்றன, இவை மிகவும் ஆபத்தானவை.

உக்ரைன் போரில் ரஷ்யா வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியது இது முதல்முறை இல்லை, முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலை மீது ரஷ்யா இந்த வகையான ஆயுதங்களை பயன்படுத்தியது.

Related Posts