தான் இலாபம் உழைக்க நினைத்திருந்தால் வைத்திய நிறுவனத்தை அல்ல கெசினோ நிறுவனத்தையே ஆரம்பித்திருப்பேன் என, சயிடம் நிறுவனத்தின் தலைவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், சயிடம் நிறுவனத்தை ஒருபோதும் மூடும் எண்ணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இதேவேளை, சயிடம் நிறுவனம் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அவரே தற்போது இதனை எதிர்க்கிறாரே என ஊடகவியலாளர் ஒருவர் இச் சந்தர்ப்பத்தில் வினவினார்.
இதற்கு பதிலளித்த நெவில் பெர்ணான்டோ, அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகள் எனவும், அதிகாரத்தில் இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டுடனும், அதிகாரத்தில் இருந்து நீங்கியதும் மற்றொரு நிலைப்பாட்டுடனும் இருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், நேற்றையதினம் சயிடம் நிறுவனத்தின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து வௌியிட்ட அவர், இதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அதி தீவிர இடதுசாரி குழுக்களுமே பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.