சயிடத்தால் மருத்துவ பீட மாணவர்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்படாது

சயிடம் நிறுவனம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சயிடம் நிறுவனத்தால் வைத்திய பீட மாணவர்கள் எவருக்கும் அநீதி இழைக்கப்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று அக்கரபத்தணை – ஊட்டுவில் பெங்கட்டன் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related Posts