திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் விதுர கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து வயிற்றில் பெரியகல் ஒன்று கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் இறந்த நிலையில் நேற்று அதிகாலை 12.10 மணியளவில் சடலமாக மீட்க்கப்பட்டு இருந்தார்.
கொடூர பாலியல் வன்புணர்வின் பின்னரே குறித்த சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
முன்னதாக சிறுவனை தேடிச் சென்ற மக்கள் கடற்படை முகாம் அருகே அமைந்துள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் உள்ளே பாலியல் துஷ்பிரயோகம் தடயங்கள் காணப்படுவதாக கூறியுள்ளனர்.
கடற்படையினர் பயன்படுத்தும் சப்பாத்தின் லேஸ் இனாலேயே குறித்த சிறுவனின் உடலும், கல்லும் பிணைக்கப்பட்டுள்ளன.
தர்சன் காணாமல் போன நாளன்று கடைசியாக இலங்கை கடற்படையினர் தான் அழைத்து சென்றதாக நேரில் பார்த்த சிறுவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே உள்ள இராணுவ காவலரணில் சிறுவனுக்கு சொக்லேட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
தர்சனை ஓரின சேர்க்கைக்குள்ளாக்கி இலங்கை கடற்படையினர் கொலை செய்துவிட்டு கிணற்றில் போட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஐந்து மாதத்திற்கு முன்னர் தான் தர்சனின் குடும்பம் சம்பூரில் மீள்குடியேறியுள்ளது. இவர் குறித்த குடும்பத்தின் கடைசிப் பிள்ளை (மூன்றாவது குழந்தை) ஆவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்திலிருந்து இராணுவத்தை அகற்றாமல் அப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றிய ஜனாதிபதியே இக்கொடூரக் கொலைக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டுமென மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
முன்னைய செய்தி –