சம்பிக்க ரணவக்க, யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்

யாழ்ப்பாணம் வந்துள்ள மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க யாழ் மாவட்டத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டதுடன் புதிய அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

அத்துடன் யாழ் புகையிரதம் நிலையம் முன்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிலையான திட்டத்தினையும் அவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து யாழ் நீதிமன்ற தொகுதிக்கு முன்பாக யாழ் நிர்வாக தொகுதிக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்த அமைச்சர் தூர சேவை பேருந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வுகளில் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts