ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அத்துடன் ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பிலவும் பதவி விலகியுள்ளார்.
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நேற்று (17) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கோபம் இல்லை என்றும் நாட்டுக்காகவும் பௌத்த சமயத்திற்காகவும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பிரிவினைவாத திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள தமிழ் மக்களை பணையக்கைதிகளாக வைத்து நாசிச செயலில் ஈடுபட்டதால் அந்த மக்களை மீட்க மனிதாபிமான நடவடிக்கை/யுத்தம் செய்ய வேண்டிய இருந்ததாகவும் ஆனால் யுத்தம் முடிந்து இன்று மக்கள் நியாயமான சமூகமொன்றை எதிர்பார்த்துள்ள நிலையில் சிறிய பிரிவினர் அதற்கு தடையாக இருப்பதால் அதனை எதிர்த்து செயற்பட வேண்டியுள்ளதாகவும் சம்பிக்க தெரிவித்துள்ளார்.
தாம் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவது மக்களுக்காகவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.