சம்பா நடனத்துடன் பிரேசிலுக்கு கூட்டிச் செல்லும் கூகுள்

உலக கோப்பை கால்பந்து போட்டிகள், துவங்கியுள்ள நிலையில் கூகுள் அந்த விழா சார்ந்த ஓவியங்கலை தனது முகப்பில் வைத்து தனது பயனாளிகளை உலக கோப்பை ஜுரத்துக்கு அழைத்துச் செல்கிறது. ரசிகர்களை இணைக்கும் பாலமாக கூகுள் செயல்பட போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

google-logo

உலகின் எந்த ஒரு பெரிய நிகழ்வாக இருந்தாலும், கூகுள் முகப்பை பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். கூகுள் தேடுபொறியின் முகப்பில் விழாவுக்கு ஏற்ற கிராபிக்ஸ்கள் செய்யப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு தீபாவளி என்றால் பட்டாசு வெடித்துச் சிதறும். ஆண்டாண்டுக்கு அதன் வடிவமைபப்பை மாற்றிக்கொண்டேயுள்ளது கூகுள். சோக நிகழ்வு, அல்லது மறைந்த முக்கிய பிரமுகர்களின் நினைவு தினம் என்றால் அதையும் முகப்பில் போட்டு நினைவூட்டும் கூகுள்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பிபா உலக கோப்பையை தற்போது கையிலெடுத்துள்ளது கூகுள். ரசிகர்களை உற்சாகபடுத்த இந்த ஏற்பாட்டை கூகுள் செய்துள்ளது.

photo3

கூகுள் தேடு பொறியின் முகப்பில் கால்பந்து ஒன்று இடதுபுறமிருந்து வலதுபுறம் நோக்கி, உருண்டு வருகிறது. உருளும் கால்பந்து, பிபா உலக கோப்பையை நடத்தும் பிரேசில் நாட்டு தேசிய கொடியின் வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

உருண்டு செல்லும் பந்து, கூகுள் என்ற ஆங்கில எழுத்தை தட்டியதும் பிரேசில் தொடர்பான காட்சிகள் திரையில் விரிகின்றன. அந்த காட்சியில், பனைமரம், மணல்குவியல், கேபிள் கார், சுகர் லோப் மலை, ஏசு கிறிஸ்துவின் சிலுவையில் அடிக்கப்பட்ட நிலையிலான சிலை ஆகியவை இடம் பெற்று, பார்ப்போரை பிரேசிலுக்கே அழைத்துச் செல்கின்றன.

dance google

பந்து கூகுள் எழுத்தை தட்டியதும், அந்த எழுத்துக்களின் பின்புறம் பிரேசில் குறித்த காட்சி விரிவடைவதுபோல, எழுத்துக்கள் நடனமாட தொடங்குகின்றன. பிரேசிலின் பாரம்பரிய சம்பா நடனத்தையொட்டி கூகுள் எழுத்துக்கள் ஆட்டம்போடுவதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது.

photo6

கூகுள் முகப்பின் லோகோவை கிளிக் செய்தால், பிபா உலக கோப்பை தொடர்பான தகவல்களை அது அளிக்கிறது. போட்டித்தொடர் ஆரம்பித்ததும், இதில் போட்டி முடிவுகள், குரூப் அணிகளின் வெற்றி புள்ளி விவரங்கள் இடம் பெறும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

photo7

இதுகுறித்து கூகுள் கூறுகையில், இந்தாண்டு உலக கோப்பையின்போது ரசிகர்களை இணைக்கும் பாலமாக கூகுள் செயல்படும். நேரடியாக போட்டியை பார்க்கும் ரசிகர்களைப்போல, தொலைக்காட்சிகளில் பார்க்கும் ரசிகர்களும் உள்ளனர். ஆனால் இப்போது இணையதளத்தில் சாட் செய்தபடியே போட்டியை ரசிப்போர் அதிகரித்துள்ளனர். இதுபோன்ற பலதரப்பட்ட ரசனைக்கு கூகுள் தீனி போடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts