தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 2,500 ரூபாவால் அதிகரிக்குமாறு நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை செயற்படுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தனியார்துறையினரின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை எந்தவொரு தனியார் நிறுவனமும் நிராகரித்துச் செயற்பட முடியாது.
மே மாதம் முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகின்றது. சம்பள அதிகரிப்பை புறக்கணித்துச் செயற்படும் தனியார் நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும் எதிராக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும். சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிடின் நீதமன்றில் வழக்கும் தொடரப்படும்” – என்றார்.