சம்பந்தன் தலைமையில் திருமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடகிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை சிவன் ஆலயத்தில் மிக , பக்திபூர்வமாக விசேட பூஜையுடன் ஆரம்பமானது

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், முன்னாள் கிழக்குமாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதித் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பக்தி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் விசேட பூசை இடம்பெற்றது. பூசையின் முடிவில் அஞ்சலிச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டியும், தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு வேண்டியும் இறைவணக்கம் செலுத்தப்பட்டது.

Related Posts