சம்பந்தனை கொலை செய்வதற்கு 25 மில்லியனுக்கு கூலிப்படை!- பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு முதல்வர் முறைப்பாடு

எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களை கொலை செய்வதற்கு   ரூ  25 மில்லியனுக்கு கூலிப்படை அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனை செய்து அதனை புலிகள் மீது குற்றம் சுமத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்    வடக்கு முதல்வர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு  மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். தனது முறைப்பாட்டின் பிரதியை சனாதிபதிக்கும் அனுப்பிவைத்துள்ளார்

பலப்பிட்டிய என்ற இடத்தில் இருந்து சிங்கள நபர் ஒருவரே மேற்படி மின்னஞ்சலை தனக்கு அனுப்பிவைத்திருந்ததாகவும் பின்னர் அவரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரித்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எழுகதமிழ் நிகழ்வின் பின்  முதலமைச்சர் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாகவும் அதனை புலிகள் மீது சாட்டுவதற்கு முயற்சிகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த குற்றசாட்டினை அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில்  மேலும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts