சம்பந்தனும், சுமந்திரனும் பேப்பட்டம் கட்ட முயற்சிக்கின்றனரா?; மக்கள் கடும் விசனம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனும் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும் பேப்பட்டம் கட்டுவதற்கு முயற்சிக்கின்றனரா? என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

கேப்பாபுலவு புலக்குடியிருப்பு பகுதியிலுள்ள காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தம்மை சம்பந்தனோ? சுமந்திரனோ? தொலைபேசி ஊடாகவேணும் தொடர்பு கொண்டு கலந்துரையாடவில்லை எனவும் அவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

எமக்காக குரல்கொடுக்க அவர்கள் வராவிடின் வேறு யார் எமது பிரச்சினைகளுக்கு செவி சாய்ப்பார்கள் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Posts