சம்பந்தனின் அலுவலகத்துக்கு முன்னால் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்துக்கு முன்னால், காணாமற்போனோரின் உறவினர்கள், அமைதியான முறையில் தற்போது ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவரிடம் மனுவொன்றைக் கையளிப்பதற்காக வருகை தந்திருந்த உறவினர்களே, இவ்வாறு அமைதிப் போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

“காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகத்தை விரைவில் ஸ்தாபிப்பதற்கு, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறே, அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Related Posts