சமையல் எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை எரிவாயு விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, எரிவாயு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், செவ்வாய்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த லாஃப்ஸ் எரிவாயு கப்பலில் இருந்து வழங்கப்பட்ட எரிவாயு இன்று விநியோகிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட ஏனைய பகுதிகளுக்கும் லாஃப்ஸ் எரிவாயு முறையாக விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லாஃப்ஸ் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 6,850 ரூபாய் என்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 2740 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Posts