சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்குமா? அரசாங்கத்தின் அறிவிப்பு

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த முடிவினை அமைச்சரவை உப குழு எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்திருந்தது.

இதனை அடுத்து விலையை அதிகரிப்பது தொடர்பாக ஆராய அமைச்சரவை உப குழு இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts