சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவால் அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை நேற்று (27) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அதன் விநியோகஸ்தர்களாக லிப்ரோ மற்றும் லாவ்ப் காஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.

சமையல் எரிவாயு 12.5 கிலோக் கிராம் எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை 1431 ரூபாவிலிருந்து 1676 ரூபாவாக அதிகரிக்கிறது.

இந்த விலை அதிகரிப்புக்கு பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை அனுமதியளித்தது.

2015ஆம் ஆண்டு சமையல் எரிவாயுவின் விலை 2 ஆயிரத்து 440 ரூபாவாகவிருந்தது. புதிய அரசு பதவியேற்று அதன் விலையை 800 ரூபாவால் குறைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts