சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாவால் அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை இன்று (24) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.

சமையல் எரிவாயு 12.5 கிலோக் கிராம் எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1696 ரூபாவாக மாற்றப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்புக்கு பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை அனுமதியளித்தது.

2015ஆம் ஆண்டு சமையல் எரிவாயுவின் விலை 2 ஆயிரத்து 440 ரூபாவாகவிருந்தது. புதிய அரசு பதவியேற்று அதன் விலையை 800 ரூபாவால் குறைத்திருந்தது. பின்னர் ஏப்ரல் 27ஆம் திகதி 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. எனினும் ஜூன் 29ஆம் திகதி அதன் விலை மீண்டும் 138 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 2 மாதங்களில் அதன் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.

Related Posts