சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகளில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் இவ்வாறான தீரமானத்தை மேற்கொள்ளவில்லை என்றும் செயலாளர் தெரிவித்தார்.

எரிவாயு நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சமீபத்தில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக குறிப்பிட்டார்.

Related Posts