உள்நாட்டு சமையல் எரிவாயுயின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோ 250 ரூபாய் அதிகரித்து 4,610 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் 5 கிலோ எரிவாயு 100 ரூபாய் அதிகரித்து 1,850 ரூபாயாகவும் 2.3 கிலோ 45 ரூபாய் அதிகரித்து 860 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லாப்ஸ் எரிவாயு விலையில் உயர்வு இருக்காது என லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய விலைக்கே எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.