சமூக வலைத்தளங்களால் மக்கள் சோம்பேறிகளாகிவிட்டனர் : ஐஸ்வர்யாராய்

கைத்தொலைபேசி மற்றும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தங்களுக்கு மக்கள் அடிமைகளாகி விட்டனர். எப்போதும் கைபேசியும் கையுமாகவே திரிகிறார்கள். வாரத்தில் 7 நாட்களும் ஒரு நாளில் 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். யாராவது தன்னிடம் பேசினால் அவர்களுக்கு பதில் சொல்ல கூட நேரம் இல்லாமல் காதுகளில் கைபேசியை வைத்து தீவிரமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

aishwarya-rai-bachchan-pti-sarbjit-promo

மனிதர்களை விட கைபேசிகளுக்குத்தான் மதிப்புக் கொடுக்கிறார்கள். சாப்பிடும் போதும் கைபேசியை கைவிடுவதில்லை. ஒரு கையை காதில் கைபேசியை அழுத்திப் பிடித்து பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள். ஏதேனும் பொருட்கள் கீழே விழுந்தால் கூட குனிந்து எடுப்பது இல்லை.

வீடு, அலுவலகங்கள், ஹோட்டல்கள் என்று எங்கு இருந்தாலும் பேஸ்புக், டுவிட்டர், கைப்பேசி என்றுதான் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களோடுத்தான் இருக்கின்றார்கள். சமூக வலைத்தளங்களால் அவர்கள் சோம்பேறிகளாகிவிட்டனர். வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என்று அனைவரும் இதற்கு அடிமைகளாகி விட்டனர். இதை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது.

இது தொடர்வது சமூகத்துக்கு நல்லது அல்ல. சமூக வலைத்தளங்கள் பிடியில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும். அதுதான் எல்லோருக்கும் நல்லது என்று ஐஸ்வர்யாராய் தெரிவித்தார்.

Related Posts