சமூக ஊடகங்கள் மீதான தடை முற்றாக நீக்கம்!

இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை, முற்றாக நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பிரகாரம், இன்று (வியாழக்கிழமை) சமூக ஊடகங்களின் பாவனை வழமைக்குத் திரும்பியுள்ளது.

கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களும் காணொளிகளும் பகிரப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், வன்முறைகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சமூக ஊடகங்களின் பாவனையை அரசாங்கம் தற்காலிகமாக துண்டித்திருந்தது.

தற்போது நாடு இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில், வைபர் மற்றும் வட்ஸ் அப் மீதான தடைகள் நேற்று நீக்கப்பட்டிருந்தன. தற்போது ஃபேஸ்புக் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts