சமூகச் சீரழிவுகளை மக்களால் இனங்கண்டு கொள்ள முடியும். அவ்வாறு இனங்கண்டு கொள்ளக் கூடியவற்றை பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக அறிவியுங்கள் என காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அதிகாரி ஜபார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வீதியோரங்களில் நின்று பாடசாலை செல்லும் மாணவிகள் மற் றும் யுவதிகளுடன் பகிடவதையில் ஈடுபட்டுவரும் இளைஞர்களை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும்.
மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்துதல்,அதிக சத்தங்களை எழுப்புதல் போன்றவற்றை நீங்கள் அவதானித்தால் அது தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் ஆட்டோச் சாரதிகளுக்கு தெரியாத இடங்களே இல்லை. அவர்கள் நினைத்தால் ஒவ்வொரு பிரதேசங்களிலும் நடக்கும் சமூகச் சீரழிவுகளை தெரியப்படுத்த முடியும்.
சிறுவர்கள் இந்த உலகத்தின், எதிர் காலத்தின் மிகப்பெரிய சொத்துக்கள். அவர்களின் கல்விச் செயற்பாடுகள், நடத்தைகள் என்பவற்றில் ஒவ்வொரு பெற்றோரும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இதனைவிட அசண்டையீனமாக பாதசாரிகள் செயற்படுகின்றனர். மஞ்சள்கோடு வழியே மட்டும் வீதி யைக் கடக்க முயலுங்கள். மஞ்சள்கோடு இல்லாத பகுதிகளால் வீதியைக் கடக்கின்ற போது வீதி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.
வடமராட்சி மக்களுக்கு உரிய இயன்றளவு பாதுகாப்புக்கள் தொட ர்பில் எம்மால் முடிந்த பாதுகாப்பு அனைத்தையும் வழங்க தயாரான நிலையில் நாம் உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.