சமுர்த்தி முகாமையாளர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள்

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்ட சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் நெடுந்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், யாழ்.மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ளது.

ஏழாலையிலுள்ள சமுர்த்தி முகாமையாளருக்கு எதிராகப் பெண் ஊழியர்களினால், யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆகியோரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குறித்த முகாமையாளர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு சமுர்த்தி முகாமையாளருக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக இரண்டு பெண் அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு, யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனினால் நியமிக்கப்பட்டுள்ளது.

Related Posts