சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளித்த அமைச்சர் 14 லட்சத்து 25 ஆயிரத்து 661 சமுர்த்தி பயனாளிகள் நாட்டில் காணப்படுகின்றனர்.
இவர்களுக்காக அரசாங்கம் நான்காயிரத்து 200 கோடி ரூபா நிதியை ஒதுக்கியிருந்த போதிலும், செயல்பாட்டு ரீதியில் ஒதுக்கப்பட்ட தொகை ஆயிரத்து 200 கோடி ரூபா மட்டுமே என்றும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.