சமுக வலைத்தளத்தை பயன்படுத்தியதால் சிறுமிக்கு கிடைத்த கௌரவம்

சிரியாவில் மக்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கு உதவிய சிறுமி துருக்கியின் ஜனாதிபதியை சந்தித்தார்.

சிரியாவின் கிழக்கு அலெப்போ பகுதியிலிருந்து மீண்டு வந்த பானா அல் அபேத் என்ற ஏழுவயது சிறுமியை துருக்கி ஜனாதிபதி தயீப் ஏர்டோகன் தனது மாளிகைக்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

அலெப்போவில் தாக்குதல்களின் போது துருக்கி மற்றும் ரஷ்ய படைகள் பொது மக்கள் தாக்கப்படுகின்றார்களா என்பதை அறிவதற்கு வழியில்லாத நிலையில் குறித்த சிறுமி தனது ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் சாதாரண மக்கள் வாழ்கின்ற பகுதிகள் பற்றி அறியத்தந்து மக்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கு உதவியுள்ளார்.

அத்தோடு கிழக்கு அலெப்போ பகுதிகளிலிருந்து அகதிகளை மீட்பதற்கும் இவரது வலைத்தளப் பயன்பாடு பெரிதும் உதவியுள்ளது. இவரை பின் தொடர்ந்த சுமார் 330,000 பேருக்கு இவரே தகவல் பறிமாற்றாளராக இருந்துள்ளார்.

இது வரையும் 27 இலட்சம் அகதிகள் துருக்கியால் மீட்கப்பட்டுள்ளனர் என்பதும், அகதிகளை பாதுகாப்பாக மீட்பதில் துருக்கியின் ஆர்வமிகு பண்புகளும் வெளிப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகு விடயமாகும்.

Related Posts