சமுகத்தில் புறக்கணிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகளிகள்

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்கள் போராளிகளிகள் இன்று சமுகத்தினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

யுத்ததிற்கு முன்னர் பெண் போராளிகளுக்கு காணப்பட்ட மரியாதை யுத்ததின் பின்னர் மழுங்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றைய தினம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு விடியலை நோக்கிய பெண்கள் என்ற தலைப்பில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், வடக்கு கிழக்கு மாகாணத்தில் யுத்ததின் பின்னர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டார்.

Related Posts