குறைபாடான 13ஆவது தீர்வுத் திட்டத்தினைப் பெற்றுத் தந்த இந்தியா எமக்கு குறைபாடு அற்ற ஓர் சமஸ்டித் தீர்வினையும் பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையினை வடமாகாண முதலமைச்சர் இந்தியாவை கோரியுள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார நாள் நிகழ்வு நேற்றைய தினம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கிறீன் கிறாஸ் விடுதியில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது நாட்டில் தமிழ் மக்களின் தீர்விற்காக இந்திய அரசானது குறைபாடான ஓர் 13ஆவது தீர்வுத் திட்டத்தினைப் பெற்றுத் தந்தது. அதே இந்தியா எமக்கு குறைபாடற்ற ஓர் சமஸ்டித் தீர்வினையும் பெற்றுத் தரவேண்டும் அது இந்தியாவினால் தான் முடியும் என்றார்.