சமநிலையில் நிறைவடைந்த இலங்கை இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

Jos Buttler

இப்போட்டியில் இரு அணிகளுமே 50 ஓவர்கள் நிறைவில் 286 ஓட்டங்களை பெற்றமை விசேட அம்சமாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி சார்பில் மெத்தியூஸ் 73 ஓட்டங்களையும், பிரசண்ண 59 ஓட்டங்களையும் பெற்றதோடு, 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 09 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 287 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இங்கிலாந்து அணி சார்பாக சீ.ஆர்.வோக்கஸ் 95 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்க்கு 286 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக சி.ஆர் வோக்ஸ் (இங்கிலாந்து) தெரிவு செய்யப்பட்டார்.

Related Posts