‛சபாஷ் நாயுடு’ கமல் இயக்கிய பாடல் காட்சி

கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

kamal

இப்படத்தை கமல்ஹாசன் நடித்து 25 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘சாணக்யா’ மலையாளப் படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ் குமார் இயக்கி வருகிறார். இப்படத்திற்கான பாடல் காட்சி நேற்று படமானது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்புத் தளத்திற்கு அவர் வரவில்லை. அதனால் கமல்ஹாசனே அந்தப் பாடலுக்கான நடனத்தையும் அமைத்து பாடல் காட்சியை இயக்கியுள்ளார். இதை கமல்ஹாசனே அவருடைய டிவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே கமல்ஹாசன் நடிக்கும் படம் என்றாலே அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இயக்குனர் என்பவர் பொம்மையாகத்தான் இருப்பார். கமல்ஹாசன்தான் படம் முழுவதையும் இயக்குவார் என்று சொல்வார்கள். பெயருக்குத்தான் இயக்குனர், மற்றதெல்லாம் கமல்ஹாசன்தான், காட்சிக்குக் காட்சி அவருடைய தலையீடு இருக்கும் என்பார்கள். ‘சபாஷ் நாயுடு’ படத்திற்கான பாடல் பதிவின் போது கூட இளையராஜாவுடன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படங்கள்தான் அதிகம் வெளிவந்தன.

எப்படியிருந்தாலும் கமல்ஹாசன் படம் வெளிவந்து வசூலை அள்ளிக் கொடுத்தால் போதும் என்றுதான் வினியோகஸ்தர்கள் நினைக்கிறார்கள். அதனால் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை யார் இயக்கினால் என்ன ?, படம் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படி இருந்தாலே போதும்….

Related Posts