சபாஷ் நாயுடு: அமெரிக்காவுக்குக் கிளம்பினார் கமல்!

ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் லைகா நிறுவனம் இணைந்து சபாஷ் நாயுடு எனும் திரைப்படத்தை தயாரிக்கிறது. டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் கமலும் ஷ்ருதி ஹாசனும் நடிக்கும் படம் இது. தந்தை – மகள் வேடத்தில் கமலும் ஷ்ருதியும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் உதவி இயக்குநராக கமலின் மற்றொரு மகள் அக்‌ஷரா பணியாற்ற உள்ளார்.

kamal33

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக்கப்படுகிறது. 1989–ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26 வருடங்கள் கழித்து மீண்டும் ராஜீவ் குமாருடன் இணைகிறார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

மே 16-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் தொடங்கும் என்று கமல் முதலில் அறிவித்திருந்தார். ஆனால் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை முடிக்க சிறிது தாமதம் ஆனது. இதனையடுத்து அவர் நேற்று அமெரிக்காவுக்குக் கிளம்பிச் சென்றார். இதுபற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு மூன்று கதைத் தொகுப்புகளுடன் செல்கிறேன். அமெரிக்காவில் படக்குழு எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் தாமதித்திருந்தால் எல்லாத் திட்டங்களும் வீணாகியிருக்கும். இப்போது எல்லாமே சுமூகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Related Posts