சன்டிவி பிரியமானவள் தொடர் நாடகத்தில் பிரபாகரன்!

சன்டிவியில் ஒளிபரப்பாகும் பிரியமானவள் சீரியலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. கூடவே அம்பேத்கார், பெரியார், இரட்டமலை சீனிவாசன் ஆகியோரின் புகைப்படங்களும் புதிய கதாபாத்திரமான இசையின் வீட்டிற்குள் மாட்டப்பட்டிருந்தது சீரியல் பார்த்தவர்களிடையே புதிய கேள்வியை எழுப்பியுள்ளது.

piraba-priyamanaval545

பிரியமானவள் தொடரின் நாயகி உமா தமிழ் ஈழத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதும் இதுவரை ஈழம் பற்றி எத்தகைய பதிவுகளும் இடம் பெறவில்லை முதன் முறையாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் புகைப்படம் ஒரு சீரியலில் இடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.

பிரியமானவள் சீரியலின் கதைக்களம் ராமேஸ்வரத்தில் தொடங்கி சென்னையில் நடைபெறுகிறது. ஈழத்தைச் சேர்ந்த தமிழ் அகதிப் பெண் உமாவை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணன் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். நான்கு ஆண் குழந்தைகளுடன் சென்னையில் வசிக்கும் கிருஷ்ணன் பெரிய தொழில் அதிபர் ஆகிறார்.

priyamanaval1

உமா – கிருஷ்ணன் தம்பதியரின் மகன்கள் நடராஜ், சரவணன், திலீபன், பிரபாகரன். இதில், மூவருக்கு திருமணமாகி விட பிரபாகரனை காதலிக்கிறார் விநாயகத்தின் தம்பி மகள். ஆனால் அந்த காதலுக்கு பிரபாகரன் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை.

சதீஸ் கொலை வழக்கில் கிரிதான் குற்றவாளி என்று முடிவாகி விட்டதால் அவர் சிறைக்குப் போகவே கதை கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பித்து விட்டது. அதனால் வில்லி ஈஸ்வரி மீண்டும் வந்து அவந்திகாவின் கர்ப்ப விசயத்தை பேச ஆரம்பித்து விட்டார்.

priyamanaval345

திலீபன் – கவிதா தம்பதியர் அமெரிக்க போவதற்காக கருவை கலைத்து விடலாம் என்று கூற புதிய பிரச்சினை உருவாகிறது. ஆனால் உமாவின் கோபத்தால் அந்த முடிவை மாற்றிக்கொள்கின்றனர்.

புதிய கதாபாத்திரமாக புத்திசாலி ஆட்டோ ஓட்டும் பெண்மணியாக அறிமுகமாகிறார் இசைப்பிரியா. அவளது ஆட்டோவில் சண்டை போட்டு ஏறுகிறாள் விநாயகத்தின் தம்பி மகள். ஆட்டோவில் பணத்தையும் போட்டு விட்டு அவசரமாக சென்று விடுகிறாள்

இசையின் அப்பா ஆட்டோ ஓட்டுநர். படிப்பிற்காக சென்னை வந்திருக்கிறார் இசை. இசைப்பிரியாவின் வீட்டில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அம்பேத்கார், பெரியார், இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. டிவி சீரியலில் முதன் முறையாக ஒரு காட்சியில் பிரபாகரன் படம் இடம் பெறுவது இதுவே முதன் முறை.

சீரியலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களும் இசைப்பிரியா, திலீபன், பிரபாகரன் என ஈழத்தமிழர்களுக்கு அதிகம் பரிச்சயமான பெயர்களாக சூட்டப்பட்டுள்ளது. இனி பிரியமானவள் தொடரின் கதைக்களம் வேறு பாதையில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

priyamanaval5677

Related Posts