சனிக்கிழமைக்கு பின்னர் முறைப்பாடுகள் ஏற்க்கப்படாதாம்!

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பிலான முறைபாடுகளை அனுப்பி வைப்பதற்கான கால அவகாசம், சனிக்கிழமை (20) வரை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, 2015 நவம்பர் 30 திகதிக்கு முன்னர் இது தொடர்பிலான முறைபாடுகளையும் ஆலோசனைகளையும் அனுப்பிவைக்குமாறு பொதுமக்களை அமைச்சு கேட்டுக் கொண்டிருந்த போதும், பலரின் வேண்டுகோளின் பிரகாரம் தொடர்ந்தும் முறைபாடுகள் வந்த வண்ணம் இருப்பதாலும், சனிக்கிழமை வரை இம்முறைபாடுகளைத் தெரிவிக்கும் காலம் நீடிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் கமல பத்மசிறி தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் சாலிய பீரிஷ் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் செயற்பாடுகளை விரைவாக முடிவுக்குக கொண்டுவர வேண்டியுள்ளதால் சனிக்கிழமைக்குப் பிற்பாடு கிடைக்கப்பெறும் முறைபாடுகள் மேன்முறையீடுகள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதையும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts