சனத் ஜயசூரியவின் தீர்மானத்தில் மாற்றம்?

மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்கள் மற்றும் தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் காரணமாக கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா செய்ய இருந்த நிலையில், அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

பிரச்சினைக்குரிய நிலைமை தொடரும் பட்சத்தில் தன்னால், தனது கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியாது என்பதால் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அண்மையில் சனத் ஜயசூரிய கூறியிருந்தார்.

முடிந்தளவு அவசாரமாக அந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இதன்போது அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

Related Posts