Ad Widget

சந்தேக நபர் தற்கொலை முயற்சி : தீர்ப்பு பிற்போடப்பட்டது

கரணவாய், மூத்தவிநாயகர் கோவிலடியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய வயோதிபர் தற்கொலைக்கு செய்து கொள்ள முயற்சி செய்தமையினால், அந்த வழக்கு தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (14) வழங்கப்படவிருந்த தீர்ப்பு, எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.

வயோதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அவரது சட்டத்தரணியூடாக அறிந்த நீதிபதி, இது தொடர்பில் வைத்தியசாலைக்குச் சென்று உறுதிப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். பொலிஸார் உறுதிப்படுத்தியடுத்து, கருணையின் அடிப்படையில் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த நீதவான், வைத்தியசாலையில் வயோதிபரை காவலுக்கு கீழ் வைக்குமாறும் சிகிச்சை முடிவடைந்த பின்னர் வயோதிபருக்கான தண்டனை குறித்தான தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி பணித்தார்.

2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது, 6 வயதுக் குழந்தைக்கு தாயாகவுள்ளார். மேலும், சிறுமி தனது உயர்தரக் கல்வியைத் தொடர்ந்து வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் முதியவர், மாணவி, மாணவிக்கு பிறந்த குழந்தை ஆகிய மூவரினதும் மரபணுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, அதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts