சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் வடக்கு மாகாணத்திலும் ஊடுருவலாம் என அறிவித்துள்ள பொலிஸ் திணைக்களம், விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களிடம் கோரியுள்ளது.
இதுதொடர்பில் சந்தேகத்துக்கிடமான வாகனங்களின் இலக்கங்களுடனான விவரம் வவுனியா பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
லொறி ஒன்றும் 11 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டி உள்பட 19 வாகனங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.