கொழும்பு நகர சபைப் பகுதியில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகள் என இணங்காணப்பட்ட இருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி தாக்குதலுக்கு உதவி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட வேலாயுதம் வரதராஜ் என்பவருக்கு 290 வருடங்களும் சந்திரா ரகுபதி என்பவருக்கு 300 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட வசந்தி ரகுபதி என்பவருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலையில், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
1999ம் குறித்த தாக்குதல் இடம்பெற்றது. இதில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டதோடு, மேலும் 29 பேர் கொல்லப்பட்டனர், என்பது குறிப்பிடத்தக்கது.