சந்திரிகா பிரிட்டனுக்கு திடீர் பயணம்! – மைத்திரியுடன் முரண்பாடா?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நாட்டில் அரசியல் பதற்ற நிலை அதிகரித்துவரும் வேளையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க நேற்றுப் பிரிட்டனுக்குத் திடீர் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய சகாவான சந்திரிகா குமாரதுங்க சமீபத்தில் இடம்பெற்ற மஹிந்த தரப்பு விடயங்கள் குறித்து கடும் அதிருப்தியடைந்துள்ளார் எனவும், இந்நிலையிலேயே அவர் பிரிட்டன் பயணமாகியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குவதை சந்திரிகா நேற்றுமுன்தினம் கடுமையாக எதிர்த்திருந்தார். ஆனால், இந்த எதிர்ப்பையும் மீறி அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும், முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயணம் எனத் தெரிவித்துள்ளது.

Related Posts