சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது!

சந்திராயன் -2  இன்று விண்ணில் ஏவப்பட்டது! இதன் சிறப்புகள் பல அவற்றுள் முக்கியமானது இந்தச் செயற்கைக் கோளின் முழு ஆணைகளும் (Commands) ரிது, வனிதா என்ற இரு பெண்களால் நிர்வகிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் இயக்குநரே (Mission Director) ஒரு பெண்தான். ரிது செவ்வாய்க்கு இந்தியா விண்கலம் அனுப்பியதில் (மங்கல்யான்) முக்கியப் பங்காற்றியவர். வனிதா விருது பெற்ற வடிவமைப்பாளர்

இஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ். எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. தற்போது, நிலவின் தென் துருவ பகுதியில் உள்ள கனிம வளங்கள் மற்றும் அங்கு மக்கள் வாழ சாத்தியம் உள்ளதா என ஆய்வு மேற் கொள்ள,’சந்திரயான் – 2′ என்ற விண்கலத்தை, உருவாக்கியுள்ளது

 

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் – 2 விண்கலத்தை சுமந்தபடி, ‘ஜி.எஸ். எல்.வி., மாக் 3 – எம்1’ ராக்கெட், 15ம் தேதி, அதிகாலை, 2:51 மணிக்கு,விண்ணில் பாய இருந்தது.

அதற்கு, 56 நிமிடங்கள், 24 வினாடிகள் இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சந்திரயான் – 2 விண்கலம் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக, இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் – 2 விண்கலத்தை சுமந்தபடி, ‘ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 – எம் 1’ ராக்கெட், இன்று மதியம், சரியாக 2:43 மணிக்கு, விண்ணில் பாய்ந்தது.

விண்ணில், சந்திரயான் – 2 விண்கலம், 48 நாட்களில், 15 கட்டங்களை கடந்து, நிலவின், தென் துருவத்தில் தரை இறங்கும். உலகின் எந்த நாடும், எடுக்காத முயற்சியை, நம் நாடு எடுத்துள்ளது. என இஸ்ரோவின் தலைவர் கூறினார்

உலக அரங்கில், புதிய அறிவியல் கண்டுபிடிப்பாக, நிலவில் தண்ணீர் இருப்பதை, ‘சந்திரயான் – -1′ விண்கலம் கண்டுபிடித்தது.தற்போது, நிலவின் தென் துருவத்தில்,’சந்திரயான் – -2’ விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதால், விஞ்ஞான ரீதியாக, அதிக தகவல்கள் கிடைக்கும் என அவர் கூறினார்.

Related Posts