சந்திமால் சதம்: இலங்கை அணி வெற்றி!

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

Ireland v Sri Lanka - One Day International

துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கட்டுகளை இழந்து 303 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் தினேஸ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும், மெத்தியுஸ் 49 ஓட்டங்களையும் பெற்றதோடு, வேகமாக துடுப்பெடுத்தாடிய தசுன் சானக 19 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்

அயர்லாந்து அணியின் சார்பாக ரன்கின் மற்றும் மெக்கார்தி தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

மழை காரணமாக அயர்லாந்து அணிக்கு 47 ஓவர்களில் 293 ஒட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அயர்லாந்து அணி 40.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 216 ஒட்டங்களை மாத்திரமேபெற்று 76 ஒட்டங்களால் தோல்வியடைந்தது.

Related Posts