காமெடி வேடத்தில் நடித்து வந்த கருணாஸ் பின்னர் கதாநாயகன் ஆனார். இவர் நடித்த ‘திண்டுக்கல் சாரதி’ வெற்றி பெற்றது. அடுத்து ‘அம்பா சமுத்திரம் அம்பானி’, ‘சந்த மாமா’, ‘ரகளபுரம்’, ‘லொடுக்குப் பாண்டி’ படங்களில் நடித்தார். தொடர்ந்து இது போன்று கதாநாயகனாக நடிக்கும் படங்கள் அவருக்கு அமையவில்லை. எனவே, இப்போது மீண்டும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘அழகு குட்டி செல்லம்’ படத்தில் முக்கிய குணச்சித்திர வேடத்தில் நடித்து இருக்கிறார். மீண்டும் நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கத் தொடங்கி உள்ளார். இப்போது சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் கருணாஸ் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். ‘எனக்கு இன்னொரு பெயர்’ என்ற இந்த படத்தில் பேஸ்புக் மோகன் என்ற பெயரில் கருணாஸ் நடிக்கிறார்.
இது முழுக்க முழுக்க காமெடி வேடம். புகழ் படத்தில் ஜெய் அண்ணனாக கருணாஸ் நடித்து வருகிறார். மேலும் பல படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.