சந்தானத்தின் தந்தை உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி (காணொளி)

நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கல்லீரல் செயல்திறன் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீலமேகம், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இதனையடுத்து, அவரது உடல் பொழிச்சலூரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

நீலமேகத்தின் உடலுக்கு நடிகர் ஆர்யா , உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

நீலமேகத்தின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துத்துள்ளனர். 

Related Posts