‘சதோச’ வில் 1Kg அரிசியை 78 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை!

ஒரு கிலோ அரிசியை 78 ரூபாவிற்கு பாவனையாளர்களுக்கு விற்பனை செய்யுமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் சதோச அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பண்டிகைக் காலப்பகுதியில் சந்தையில் அரிசியின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நெல் களஞ்சியப்படுத்தும் சபையினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகை நெல்லைக் கொள்வனவு செய்யப்படவுள்ளது. அத்தோடு பத்தாயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலையில் உள்ள 25 ஆயிரம் மெற்றிக் தொன் வெள்ளை மற்றும் நாட்டரிசி நெலை உடனடியாக கொள்வனவு செய்து அரச மற்றும் தனியார் பிரிவுகளின் ஆலைகள் மூலம் அரிசியாக்கி, ஒரு கிலோ அரிசியை 78 ரூபாவிற்கு பாவனையாளர்களுக்கு விற்பனை செய்யுமாறும் அமைச்சர் சதோசவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பிற்கு மாற்றீடாக பத்தாயிரம் மெற்றிக் தொன் அரிசியை உடனடியாக இறக்குமதி செய்து லங்கா சதோசவின் மூலம் விற்பனை செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். சந்தையில் அதிக விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்கும் லங்கா சதோசவின் மூலம் குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்வதன் மூலமும் சந்தையில் போட்டித் தன்மையை ஏற்படுத்த முடியும். இதனுடாக நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எந்த வகையிலும் நாட்;டில் அரிசிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது. பண்டிகைக் காலப் பகுதியில் கூடுதலான விலைக்கு அரிசியை விற்பனை செய்வதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இதனை உறுதி செய்வதற்காக இந்தத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் நுகர்வோர் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related Posts