“சதொச “வில், அரிசி தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில்!

சதொச நிறுவனம் தற்சமயம் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதனால் இதனால் அதிகளவினலான வாடிக்கையாளர்கள் சதொச நிலையங்களுக்கு செல்வதாக சதோசவின் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இதேவேனை சிறு வர்த்தகர்களுக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொவித்த அவர் 25 மாவட்டங்களிலுள்ள 28 மத்திய நிலையங்களில் சிறு வர்த்தகர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

நுகர்வோருக்கு தேவையான உணவுகளை குறைந்த விலையில் வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் அமுலாகிறது. சதொச நிறுவனம் தற்சமயம் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

ஒரு தேய்காய் 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வரையறுக்கப்பட்ட சதொச விற்பனை நிலையங்களில் அமுலாகும் தேங்காய் சலுகை விலையில் தேங்காயை விற்பனை செய்யும் நடவடிக்கை சகல விற்பனை நிலையங்களில் மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சதொசவின் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் மேலும் கூறினார்.

Related Posts