சண்டைக்காட்சியில் மயங்கி விழுந்த ரஜினி: மருத்துவமனையில் அனுமதி

கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் சமீபத்தில் தான் முடிவடைந்தது.தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

linga-rajini

அண்மையில் இப்படத்திற்காக எடுக்கப்பட்ட சண்டை காட்சியில் ரஜினி எந்தவித டூப் இல்லாமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த சண்டை காட்சி படப்பிடிப்பின் போது ரஜினி திடீரென்று எதிர்ப்பாராத விதமாக மயங்கி விட்டாராம். உடனே படக்குழுவினர் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின் ரஜினிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், ஓய்வு இல்லாத காரணத்தால் தான் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், இரண்டு நாட்கள் அவர் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதனால் அடுத்தடுத்த படப்பிடிப்பை படக்குழுவினர் மாற்றி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts