சட்ட விரோதமான பிரமிட் வியாபாரத்துக்கு எதிராக கேள்வியெழுப்பியவர்களுக்கு மிரட்டல்

யாழ். சாவகச்சேரியில், இடம்பெற்ற சட்ட விரோதமான பிரமிட் வியாபாரம் தொடர்பான தெளிவூட்டும் நிகழ்வில், நிறுவன முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் அரசால் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறையிலான வியாபார முறை மூலம் ஏமாற்றப்பட்ட மக்கள், ஏமாற்றிய பணத்தை திருப்பி வழங்குமாறும் இந்நிகழ்வின் போது எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை அடிபணியும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts