சட்டவிரோதமாக வங்கியில் பணத்தினைப் பெற முயன்றவர் கைது!

யாழ்.நகர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் வேறொருவரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணத்தினை எடுக்க முயற்சித்தவர் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.

யாழ்.நகரின் மத்தியில் உள்ள வங்கி ஒன்றின் கிளையிலையே குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்று உள்ளது.

குறித்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஏ.ரி.எம். அட்டையை தவறவிட்டுள்ள நிலையில், அதில் அட்டையின் இரகசிய குறியீட்டையும் எழுதி வைத்துள்ளார்.

எனினும் அட்டையைத் தவற விட்டமை தொடர்பாக உடனடியாக குறித்த வங்கிக்கு அறிவித்து உள்ளார்.

இந்நிலையில் தொலைந்ததாக அறிவிக்கப்பட்ட அட்டையைப் பயன்படுத்தி ஒருவர் பணத்தினை மீளப் பெற முயற்சிக்கையில் வங்கி ஊழியர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்து யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts