சட்டவிரோதமாக நியூஸிலாந்திற்குச் செல்ல முற்பட்ட இலங்கை அகதிகள் கைது

சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்திற்குச் செல்ல முற்பட்ட இலங்கை அகதிகள் குழுவொன்று இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் நியூஸிலாந்துக்கு செல்ல முற்பட்ட 06 இலங்கை அகதிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அகதிகள் முகாமில் தங்கியுள்ள குறித்த அகதிகள் நியூஸிலாந்திற்குச் செல்ல தயாரான வேளை இந்திய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்திற்கு அழைத்துச் செல்வதற்காக கடத்தல்காரர், ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபா பணம் அறவிட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Posts